குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண முதலமைச்சர் நியமிக்கும் விசாரணை குழுவின் விசாரணைக்கு தாம் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என வடமாகாண சுகாதார அமைச்சர் மற்றும் மீன்பிடி அமைச்சர் ஆகியோர் தெரிவித்து உள்ளதாக யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.
அது தொடர்பில் குறித்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,
முதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் இல்லை. அவ்வாறு முதலமைச்சரினால் நியமிக்கப்படும் சட்ட வலுவற்ற குழுவாகும். அந்த குழுவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது.
சட்டரீதியுமான சுயாதீனமுமாக தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு அதன் ஊடாக விசாரணை செய்யப்படுமாயின் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தாம் தயார் என வடமாகாண மீன் பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் ஆகியோர் தெரிவித்ததாக குறித்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
1 comment
‘ஒற்றுமையே பலம்’, எனச் சர்வதேச நாடுகள் திரு. சம்பந்தனுக்குப் போதனை செய்து கொண்டிருக்கையில், தமிழரசுக் கட்சி/ TNA பேச்சாரரான திரு. சுமந்திரன்(?) ‘வடமாகாண முதலமைச்சர் திரு.விகேஸ்வரனைத் துரத்தாமல் நான் ஓயப் போவதில்லை’, என்ற சாரப்படக் கருத்துக்களைத் தெரிவித்துவரும் நிலையில், திரு. சுமந்திரனால் வழிநடத்தப்படும், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர்கள் மட்டும் எப்படி விசாரணைகளுக்கு ஒத்துழைப்புத் தருவார்கள்?
குறித்த அமைச்சர்கள் கண்ணியமானவர்கள் என்றால், விசாரணைகளுக்கு முகம்கொடுத்து, அவற்றைப் பொய்யென நிரூபிக்க முன்வர வேண்டும்! அதை விடுத்து விசாரணைக் குழுவில் குறைகாண்பதென்பது, ‘நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியது சாட்டு’, என்பதாகவே அமையும்! தமிழரசுக் கட்சி தனது நம்பகத் தன்மையையும், சுயத்தையும் காப்பாற்ற எண்ணினால், திரு. சுமந்திரனின் வாயைக் கட்டிப் போட முன்வர வேண்டும்! திரு. சுமந்திரனுக்கு கூஜாத் தூக்கும் தமிழரசுக் கட்சித் தலைவர் திரு. மாவை சேனாதிராஜா இது குறித்துச் சிந்திப்பாரா?