159
இலங்கை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு கோட்டாவை அதிகரிப்பது குறித்து தனது நாடு கவனத்திற்கொள்ளுமென தென்கொரியாவின் மனிதவள அபிவிருத்தி சேவை தலைவர் போராசிரியர் பார்க் யங் பம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் பார்க், இன்று (28) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
விவசாயத்துறையில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு கோட்டாவை அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து ஜனாதிபதி வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Spread the love