குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளதனைத் தொடர்ந்து தபால் தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்ந்தும் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளடக்கிய பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன.
இந்தநிலையில் இன்றைய தினமும் மூன்றாவது நாளாக தொடர்ந்தும் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தபால் திணைக்கம் மற்றும் தபால் தொழிற்சங்கங்களின் அனுமதியின்றி நுவரெலியா, கண்டி மற்றும் காலி தபால் காரியாலயங்கள் சுற்றுலாத்துறைக்காக பயன்படுத்தப்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஊழியர்களை பணியில் அமர்த்துவது தொடர்பான தமது கோரிக்கைக்கு அரசாங்கம் உரிய பதிலளிக்கவில்லை என தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.