இந்தியா

காஷ்மீரில் 3 பிரிவினைவாத தலைவர்கள் கைது

காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் 3 பேரின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் செயல்பட்டு வரும் பல்வேறு பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தீவரவாதிகளிடம்  பணத்தை பெற்று, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, தேசிய புலனாய்வு குழு அதிகாரிகள் காஷ்மீர் அரியானா மற்றும் டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் உள்ள பிரிவினைவாத தலைவர்களின் இடங்களில் சோதனை மேற்கொண்டதில் அதிகளவான பணமும், முக்கிய ஆவணங்களும் சிக்கின.

இதன் தொடர்ச்சியாக நேற்று காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் 3 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு குழு அதிகாரிகள் சோதனை நடத்தியதன் பேரில் குறித்த 3 பேரின் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


Add Comment

Click here to post a comment

Leave a Reply