குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
கட்டாருக்கு மேலும் 48 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா மற்றும் ஏனைய மூன்று அரேபிய நாடுகள் இவ்வாறு கட்டாருக்கு மேலும் இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது.
நிபந்தனைகளுக்கு அடிபணியத் தவறினால் மேலும் தடைகள் விதிக்கப்படும் என இந்த அரபு நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அல் ஜசீரா செய்தி ஊடகத்தை ரத்து செய்தல் உள்ளிடட 13 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அவற்றை பூர்த்தி செய்ய அரபு நாடுகள் கட்டாருக்கு கால அவகாசம் வழங்கியிருந்தது.
எனினும் இந்த கால அவகாசத்திற்குள் கட்டார் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதனால் மேலும் 48 மணித்தியாலங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கட்டார் கடும்போக்குவாதத்தை போசிப்பதாகக் குற்றம் சுமத்தி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் எவ்வித கடும்போக்குடைய நடவடிக்கைகளையும் போசிக்கவில்லை என கட்டார் நிராகரித்துள்ளது.