குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளது. வெற்றிகரகமாக முதல் தடவையாக இவ்வாறு ஓர் ஏவுகணை பரீட்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடகொரியாவின் அரச தொலைக்காட்சி இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ளது. குறித்த ஏவுகணை ஜப்பானின் கடல் பகுதியில் வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்த ஏவுகணை நடுத்தரமானது எனவும் இதனால் தமது நாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என ரஸ்யாவும்;, அமெரிக்காவும் அறிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் ஏவுகணைப் பரிசோதனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வடகொரியா பல ஏவுகணைகளை பரீட்சித்துள்ளது. ஏவுகணை மற்றும் அணுச் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளுமாறு வடகொரியாவிடம், சீனாவும் ரஸ்யாவும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.