விளையாட்டு

மருத்துவ சிகிச்சைகள் பூர்த்தியாகியுள்ளன – டைகர் வுட்ஸ்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமது மருத்துவ சிகிச்சைகள் பூர்த்தியாகியுள்ளதாக அமெரிக்க நட்சத்திர கொல்ப் வீரர் டைகர் வுட்ஸ் (Tiger Woods)  தெரிவித்துள்ளார். வலி மற்றும் தூக்கமின்மைக்காக சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்ததாகவும், அதற்கான சிகிச்சைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

41 வயதான வுட்ஸ் இதுவரையில் 14 பிரான கொல்ப் போட்டித் தொடர்களில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். எனினும், கடந்த 2013ம் ஆண்டின் பின்னர் வுட்ஸ் எந்தவொரு போட்டித் தொடரிலும் வெற்றியீட்டியதில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டில் நான்காவது தடவையாகவும் வுட்ஸிற்கு முதுகு பகுதியில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, மதுபோதையில் வாகனத்தை செலுத்தியதாக குற்றம் சுமத்தி கடந்த மே மாதம் வுட்ஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

நெருக்கடியான தருணங்களில் தமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply