உலகிலேயே செல்ஃபி எடுக்கச் சென்று உயிரிழப்போரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சமீப காலமாக, செல்ஃபியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும், உலகிலேயே இந்தியாவில் தான் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2014 -ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியாவில்தான் அதிக அளவில் செல்ஃபி மரணங்கள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 76 பேர் இந்தியாவில் மரணமடைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவை தொடர்ந்து ரஷ்யா 2-வது இடத்திலும், அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன.