உலகம்

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 74 சீனப் பிரஜைகள் கம்போடியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 74 சீனப் பிரஜைகள் கம்போடியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். சீன மக்களிடமிருந்து இணையம் ஊடாக கப்பம் பெற்றுக் கொண்டதாக இந்த 74 சீனப் பிரஜைகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இணைய தளம் மற்றும் தொலைபேசி ஊடாக இவ்வாறு கப்பம் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீனக் காவல்துறையினர் கம்போடியாவிற்கு சென்று குறித்த குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

சீன மக்களிடமிருந்து பணம் பெற்றுக் கொள்ள கம்போடியாவை ஓர் தளமாக சில சீனப்பிரஜைகள் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கம்போடியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மிகவும் நெருக்கமான தொடர்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply