ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதிக்கு அமுலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
8 ஆயிரம் கோடி ரூபா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் மிசா பாரதி மற்றும் அவரது கணவர் சைலேஷ் குமாருக்கு உள்ள தொடர்பு குறித்து இவர் களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப் பட்டதை தொடர்ந்து இந்த அழைப்பாiணை அனுப்பப்பட்டுள்ளது.
இதில் மிசா பாரதி, டெல்லி யில் விசாரணை அதிகாரி முன்னிலையில் இன்று முன்னிலையாகுமாறு உத்தரவிடப் பட்டுள்ளது. மிசா பாரதியின் தனிப்பட்ட நிதிப் பரிவர்த்தனை உட்பட சில வகை ஆவணங்களை கொண்டுவரும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதி காரிகள் கூறினர். மிசா பாரதியின் கணவர் சைலேஷ் குமாரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.