218
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று கண்டாவளையில் இடம்பெற்றது.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று திங்கள் கிழமை காலை இடம்பெற்றது.
இதில் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் தலைமையில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இடம்பெற்றது.
ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் குருகுலராஜா, அரியரத்தினம்,பசுபதிபிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தாத்தன், சரவணபவான், டக்ளஸ்தேவனந்தா, எம் ஏ. சுமந்திரன், மற்றும் மாகாண சபை அமைச்சர்களில் கல்வி, சுகாதாரம், கடற்தொழில் அமைச்சர்கள் மூவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பலர் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திற்கு கலந்துகொள்ளவில்லை. இதனால் ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் வெறுமையாகவே காணப்பட்டது.
தொடர்ந்து இக் கூட்டத்தில் இவ்வாண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகளுக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் ஜனாதிபதியின் நிலமெகவர என்ற நடமாடும் சேவையில் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு 2380 பேர் வருகை தந்தபோது 2308 பேர் சேவைகளை நிவர்த்தி செய்து சென்றிருக்கிறார்கள் என்று வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
Spread the love