பத்தனை ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில் அண்மையில் இடம் பெற்ற பகிடிவதை தொடர்பாக விசாரித்த ஒழுக்காற்று குழுவினரின் பரிந்துரைகளை தான் முழுமையாக அனுமதிப்பதாகவும் இது தொடர்பாக முழுமையான விசாரணைகளின் பின்பு குற்றம் நிரூபிக்கப்படுகின்ற மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தும் ஒழுக்காற்று குழுவினரின் பரிந்துரைகளை தான் ஏற்றுக் கொள்வதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. பத்தனை ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில் அண்;மையில் இடம் பெற்ற பகிடிவதை தொடர்பாக எனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
நான் இது தொடர்பாக கல்லூரியின் பீடாதிபதியிடம் விடயங்களை கேட்டறிந்து கொண்டு இது தொடர்பாக கல்லூரியின் ஒழுக்காற்று குழு மூலமாக தனக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் படி பணித்திருந்தேன். அதற்கு அமைய அந்த அறிக்கை எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது
06.07.2017 அன்று மாலை இடம் பெற்ற சம்பவம் தொடர்பாக மாணவர்களை இனம் காண்பதற்காக நடாத்தப்பட்ட புகைப்படம் காண்பிக்கப்பட்டு முதலாம் ஆண்டு மாணவர்களால் இனங்காட்டப்பட்ட இரண்டாம் ஆண்டு 25 மாணவர்கள் தொடர்பாக ஒழுக்காற்று குழு கீழ் வரும் தீர்மானங்கள் மேற்கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.