கர்நாடக மாநிலத்துக்கு என தனிக் கொடியை உருவாக்குவதற்கு மாநில அரசு குழு அமைக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசமைப்பு சட்டம் 370-ன்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால், அம் மாநிலத்திற்கு என தனியாக கொடி பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கர்நாடகாவில் கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக கன்னட அமைப்பினர் மஞ்சள் சிவப்பு வண்ண கொடியை மாநில கொடியாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்துக்கு சட்டப்பூர்வமாக தனிக்கொடியை உருவாக்கவும், அதனை வடிவ மைக்கவும் 9 பேர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளார்.
இந்த குழு கன்னட கொடியை உருவாக்க தேவையான சட்டவிதி களை ஆய்வு செய்து வருகிறது. இந்த குழு தற்போது அமுலில் இருக்கும் மஞ்சள், சிவப்பு வண்ண கொடியை பிரகடனப்படுத்த திட்ட மிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது