பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கும் வேலைவாய்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
2016-2017ஆண்டு பல்கலைகழகத்திற்கு தெரிவான பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கு புலமை பரிசில் வழங்கும் நிகழ்வியே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
வேலைவாப்புக்கள் வழங்குவது தொடர்பாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் கடமைபுரியும் பெற்றோர்களின் சேவைக்காலத்தை கருத்தில்கொள்ளப்பட்டு அவர்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புபெற்றுத்தரப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும் இதுதெடர்பாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சட்டப்பிரிவு புதிய சட்டவரைபொன்றை தயாரித்து, எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது என அவர் தெரிவித்தார்.
1982 ஆண்டு ஆரம்பமான பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் புலமை பரிசில் வழங்கும் திட்டமானது ஒவ்வொருவக்கும் மாதாந்தம் தலா 5000 ருபா வழங்கப்படும்; என்பது குறிப்பிடத்தக்கது.