குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண சபை தொடர்ந்து வினைத்திறனற்ற முறையில் இவ்வாறே இயங்கினால் தான் தனது பதவியை ராஜினாமா செய்வதுடன் உறுப்பினர் பதவியிலும் இருந்து விலகி செல்வது தொடர்பில் முடிவினை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபை கடந்த மூன்று வருடங்கள் 9 மாத கால பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு எதிர்க்கட்சி தலைவர்தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாண சபையின் குறைப்படுகள் தொடர்பில் பல தடவைகள் சுட்டிக்காட்டி உள்ளதாகவும் ஆனால் யாரும் திருத்துவதாகவும் , இல்லை எனவும் தான் சொல்வதனை காது கொடுத்து கேட்கவும் தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே நிலைமை தொடர்ந்து , தொடர்ந்து மாகாண சபை வினைத்திறன் அன்றி செயற்பட்டால் தனது பதவியை ராஜினாமா செய்வதுடன் உறுப்பினர் பதவியிலும் இருந்து விலகி செல்வது தொடர்பில் முடிவினை எடுப்பதனை தவிர வேறு வழி தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
1 comment
எதிர்க்கட்சித் தலைவர் தவராசா சுட்டிக்காட்டிய குறைபாடுகளை கவனத்தில் எடுத்து கூடிய விரைவில் சரிசெய்ய வேண்டும்.
மாகாண சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் முகாமைத்துவம் தொடர்பாக பட்டறைகளை நடத்தி பயிற்சிகளை அளிக்க வேண்டும்.
இவை அனைத்திலும் முதலமைச்சர் பங்கேற்க வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.