பாபர் மசூதி நிலப் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து 60 ஆண்டுகாலமாக வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பில் 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம்; வுழங்கிய தீர்ப்பில் நிலத்தின் ஒரு பகுதியை நிர்மோகி அகாடா பரிஷத்துக்கும் மற்றொரு பகுதி ராமர் கோவில் கட்டவும் எஞ்சிய பகுதி முஸ்லிம்களின் சன்னி வக்பு வாரியத்துக்கும் சொந்தம் என தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பை மூன்று தரப்பும் ஏற்காமல் பல மேல்முறையீட்டு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் நிலுவையில் உள்ள நிலையில் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி இன்று நீதிமன்றில் வலியுறுத்தினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு மனுக்கள் விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என உறுதியளித்தனர்.