Home விளையாட்டுஇலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

by admin

இலங்கையில் நடைபெறவுள்ள   இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டித் தொடரில் இலங்கையின் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுசபை வெளியிட்டுள்ள அறிக்கையில்; இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான கிரிக்கட் போட்டித் தொடர் எதிர்வரும் வரும் 26ம் திகதி ஆரம்பமாகின்றது.

இந்தத் தொடரில் முதல் போட்டியாக இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு ரங்கன ஹேரத் இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் நிமோனியாவினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் இந்தப் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More