175
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளரை கடத்தும் முயற்சிக்கு நிதி அமைச்சின் வாகனம் பயன்படுத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சின் வெள்ளை வான் ஒன்றைப் பயன்படுத்தி இந்த கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என நிதி அமைச்சு திட்டவட்டமாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
Spread the love