182
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
உள்நாட்டு இறைவரிச் சட்டம் அடுத்த மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் கோரி அதன் பின்னர் ஓகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மறைமுக வரிகள் 80 வீதமாகவும், நேரடி வரிகள் 20 வீதமாகவும் காணப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த எண்ணிக்கை வீதத்தில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறைமுக வரியை 60 வீதமாகவும், நேரடி வரியை 40 வீதமாகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love