160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
படைவீரர்களை கைது செய்யும் அவசியம் எதுவும் கிடையாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நீண்ட கால விசாரணைகளின் அடிப்படையில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசாநாயக்க கைது செய்யப்பட்டார் எனவும் குற்றம் இழைத்திருந்தால் சட்ட ரீதியாக தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படைவீரர்களுக்காக குரல் கொடுத்தாலும் கொலையாளிகளை காப்பாற்றும் எண்ணம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love