ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை என டெல்லி சென்றுள்ள ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு பெட்ரோல் கிணறு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த 39 இந்தியரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தி சென்றிருந்தனர்.
மோசூல் நகரம் முழுவதும் இதுவரை தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்து வந்ததால் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்பதில் சிக்கல்நிலை காணப்பட்டது.
தற்போது மோசூல் நகரம் மீண்டும் அரசின் வசம் வந்துள்ளநிலையில் கடத்தப்பட்ட இந்தியர்களை தேடி கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு இந்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணமாக சென்றுள்ள ஈராக்; வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் இப்ராஹிம் அல்-எஷைக்கர் அல்-ஜாப்ரி இன்று இந்திய மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்துப் பேசியவேளையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.