தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்த காலத்தில் கட்டாய ஆட்சேர்ப்புச் செய்த குற்றத்திற்காக விடுதலைப்புலிகளின் நுண்கலைக் கல்லூரியின பொறுப்பாளராக இருந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிக்கு, வவுனியா மேல் நீதிமன்றினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைகழகத்தின் இசைத்துறையில், மிருதங்க விரிவுரையாளராக கடமையாற்றும் க. கண்ணதாசன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பெண் ஒருவரை கடத்திச் சென்ற குற்றத்திற்காக புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியும், தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுபவருமான க.கண்ணதாஸன் என்பவருக்கே ஆயுள் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு ஜனவரி காலப்பகுதியில் கிளிநொச்சியில் வைத்து விஜயபாலன் மஞ்சுளா என்ற பெண்ணை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கொண்டு சென்ற குற்றச்சாட்டு தொடர்பில் 50 வயதுடைய கனகசுந்தரம் கண்ணதாஸ் என்ற முன்னாள் போராளிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணின் தந்தையால் முறைப்பாடு செய்யப்பட்டது. இதற்கு அமைவாக 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த எதிரிக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் வியபாலன் மஞ்சுளா என்பவரை விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாட்டுக்காக கடத்திய குற்றச்சாட்டுக்காக குற்றப் பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
2016 மே மாதத்தில் இருந்து குறித்த எதிரிக்கு எதிரான வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.
வழக்கு விசாரணைகளின் போது கடத்தப்பட்ட விஜயபாலன் மஞ்சுளா என்ற பெண்ணினுடைய தந்தை நாகரத்தினம் விஜயபாலன், தாய் விஜயபாலன் சாந்திமலர் சாட்சியமளித்திருந்தனர். இதன்போது தனது மகளை குறிப்பிட்ட எதிரி வீட்டில் இருந்து இழுத்துச் சென்றதாக சாட்சியமளித்தார். அத்துடன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களும் சாட்சியமளித்தனர். அதன் பின் எதிரி நீதிமன்றிலே சாட்சியமளித்திருந்தார்.
எதிரி சாட்சியமளிக்கும் போது தான் தற்போது யாழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றி வருவதாகவும், தான் ஏற்கனவே விசேட புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நபர் எனவும் தெரிவித்திருந்தார்.
எதிர்தரப்பு விவாதம் முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் தீர்ப்புக்காக இம் மாதம் 17 ஆம் திகதி வழக்கு நியமிக்கப்பட்டு அன்றைய தினம் வழக்கு தீர்ப்புக்காக அழைக்கப்பட்டு எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எதிரியை குற்றவாளி எனக கண்டு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பு வழங்கியதோடு, தண்டனைத் தீர்ப்புக்காக இன்றைய தினம் (25. 07) வழக்கு நியமிக்கப்பட்டு இருந்தது.
இந்த எதிரி ஏற்கனவே புனர்வாழ்வு பெற்றிருந்தாலும் எதிரிக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி இந்த எதிரிக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
இதேவேளை, இந்த வழக்கு விசாரணைகளின் போது கடத்தப்பட்ட குறித்த பெண், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளின் போது மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைகளை அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன நெறிப்படுத்தியிருந்தார்.
2 comments
சிங்களத்திடம் பதவி பட்டம் சுகபோக வாழ்க்கைக்காக சோரம் போகின்றவர்கள் இருக்கும் வரை, தமிழனுக்கு விடுதலையே கிடையாது , சவேந்திரசில்வா என்ற தமிழினப்படு கொலையாளைனை சிங்கள கொலைமன்றுக்கு அழைக்கமுடியாது என்று சொன்னவனும் மனு நீதிச்சோழனாம் , தமிழ் மண்ணை ஆக்கிரமித்து நாவற்குழியில் காடையர்களின் கசிப்பு கடையை கட்ட அனுமதித்தவனுக்கு சிங்கள கொலைகார பூசாரிகள் கொடுத்த புகழாரத்தை பார்த்து சில சிங்கள அடிவருடி மனு நீதிச் சோழன்களுக்கு நாக்கில் எச்சில் ஊறிவிட்டது போல் இருக்கின்றது, பதவி பட்டம் சுக போகத்தை அனுபவிப்பதற்க்கு தமிழன் எவனையாவத காட்டி கொடுத்து நக்கி தின்னி பதவியை ஏற்றால் என்ன , என்ற
பொறுக்கிகள் எடுத்த முடிவுதான் இது , இந்தோனசியாவில் 10 வருட சிறைத்தண்டனை அனுபவித்த மயூரனுக்கு கொடுக்கப்பட்ட காட்டுமிராண்டித்தன தீர்ப்புக்கும் இதற்க்கும் வித்தியாசம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை , ராஜன்.
விளங்குற மாதிரி எழுதினால் என்ன கெட்டு விடும் சாதாரண தமிழில்..நீங்கள் சொல்வது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்றுதானே எழுதியுள்ளீர்கள்