Home இலங்கைநல்லூர் சூட்டு சம்பவம் – சரணடைந்தவருக்கு விளக்கமறியல்

நல்லூர் சூட்டு சம்பவம் – சரணடைந்தவருக்கு விளக்கமறியல்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சரணடைந்த நபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யா.நீதவான் எஸ்.சதிஸ்தரன் உத்தரவு இட்டுள்ளார்.

யாழ்.நீதவானின் வாசஸ்தலத்தில் குறித்த நபரை இன்று மாலை யாழ்.போலீசார் முற்படுத்திய  போது அவரை 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு இட்டார்.

இன்றைய தினம் குறித்த சந்தேக நபர் பதுங்கி இருந்த இடத்திற்கும் அவரை அழைத்து சென்ற போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு இருந்தனர்.

அதேவேளை பொலிஸ் விசாரணையில் தன்னுடைய மச்சான் (ஏற்கனவே கைதான நபர்) பொலிசாரின் (நீதிபதியின் மெய்பாதுகாவலர் ) துப்பாக்கியை பறிக்க முடியுமா என சவால் விட்டார் எனவும் அதனாலையே பறித்ததாகவும் அதன் போது அது தவறுதலாக வெடித்து விட்டது  என வாக்கு மூலம் அளித்து இருந்ததாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More