143
இலங்கையில் முழுவதும் சூழலுக்கு ஆபத்தான பொலித்தீன் பாவனை தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோதும் பொலித்தீன் பாவனை ஓரளவிலேயே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வடமாகாணப் பாடசாலைகளில் பொலித்தீன் பாவனையை தடைசெய்யும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் விவசாயத்திணைக்களத்தின் கீழ் இயங்கும் உள்ளூர் உற்பத்தி உணவகமான அம்மாச்சி உணவகத்தின் கிளிநொச்சி கிளையில் உணவுகள் பொதியிடும் போது இயன்றவரை பொலித்தீன் பாவனையை மட்டுப்படுத்தி முன் மாதிரியான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love