குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெனிசுலாவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வெனிசுலாவில் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ ( Nicolas Maduro) விற்கு எதிராக பாரியளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் வெனிசுலாவில் எதிர்க்கட்சியினர் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனக் கோரி இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் போராட்டங்களினால் இதுவரையில் 103 பேர்வரையில் கொல்லப்பட்டுள்ளனர். இந்தநிலையிலேயே எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் கதவடைப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.