உலகம்

பிரான்ஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ரஸ்யா தலையீடு செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் போது ரஸ்யா முகநூல் ஊடாக தலையீடு செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரஸ்ய புலனாய்வுப் பிரிவினர், பிரான்ஸின் தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron )  னின்; பிரச்சாரத்தில் தலையீடு செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போலி முகநூல் கணக்குகளை பயன்படுத்தி பிரச்சாரத்தில்  ரஸ்ய புலனாய்வுப் பிரிவினர் பங்கேற்றிருந்தனர் எனவும் குறிப்பாக தேர்தல் பிரச்சார நிலைமைகள் குறித்து இவ்வாறு கண்காணிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் பிரான்ஸ் தேர்தல்கள் தொடர்பில் போலியான தகவல்களை ரஸ்ய புலனாய்வுப் பிரிவினர் பிரச்சாரம் செய்து வந்தனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply