179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பெற்றோலிய வள கூட்டுத்தாபன பணியாளர்களின் போராட்டத்தினால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் அண்மையில் நடத்தப்பட்ட தொழிற்சங்கப் போராட்டத்தினால் இவ்வாறு பாரியளவில் நட்டம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் பணிப் புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டிருந்ததாகவும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ம் திகதி வரையில் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love