குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன
மத்திய வங்கி பிணை முறி உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல் விடயங்களில் ஊழல் இடம்பெற்றுள்ளமைக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கெதிராக ஜனாதிபதி நிதி விசாரணை ஆணைக்குழுவிலும் முறைபாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று புதன் கிழமை ரவி கருணாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகி விசாரணைக்கு முகம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையிலேயே அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரரேணை இன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் அவரது அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் ஒன்றிணைந்த எதிர்க் கட்சிகளின் 32 நாடாளுமன்ற உறுப்பினா்கள் கையொப்பம் இட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.