பாகிஸ்தானின் அமைதி முயற்சிகளுக்கு இந்தியா சாதகமான பதில் அளிக்கவில்லை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குவாஜா முகமது ஆசிப் குற்றம சுமத்தியுள்ளார்.
பக்கத்து நாடுகளுடன் சுமூக உறவையே பாகிஸ்தான் விரும்புகிறதெனவும் முக்கியமாக இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் நல்லுறவை விரும்புகிறது எனவும் தெரிவித்த அவர் இந்த பிராந்தியத்தில் நீடித்த அமைதி ஏற்பட பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிகளுக்கு இரு நாடுகளும் சாதகமான பதில் அளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா மீறுகிறது எனவும் பாகிஸ்தானில் பொருளாதார, அரசியல் ஸ்திரமற்றதன்மையை ஏற்படுத்த முயற்சிக்கிறது எனவும் தெரிவித்த அவர் ராணுவம் மூலம் தனது எல்லைகளை பாதுகாத்துக் கொள்வதற்கான முழு தகுதி பாகிஸ்தானுக்கு உள்ளது எனவும் தெரிவித்துள்ளர்h.
மேலும் தீவிரவாத செயல்களுக்கு பாகிஸ்தானை குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு அமைதி ஏற்பட பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சாதகமாக பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.