தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்க்பபட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு களைவிட, இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் மழைக் காலங்களில்தான் அதிகம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்த போதும் தற்போது மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே டெங்குவின் பாதிப்பு அதிகம் காணப்படுகின்றதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் டெங்குவால் பாதிக்கப்பட்டு ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.