குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வவுனியா சிறையில் அடித்து படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளான நிமலரூபன், டில்ருக்ஸன் ஆகியோரது 5ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
திட்டமிட்ட ரீதியில் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்தும் அதற்கு காரணமானவர்களை நீதித்துறை முன் நிறுத்தி கடும் தண்டணை வழங்கவும், படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கவும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுவிக்கவும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கக் கோரியும், இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.