Home இலங்கைஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வவுனியா சிறையில் அடித்து படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளான நிமல­ரூ­பன்,  டில்ருக்­ஸன் ஆகி­யோ­ரது 5ஆம் ஆண்டு நினை­வேந்­தலை முன்­னிட்டு யாழ்ப்பணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

திட்டமிட்ட ரீதியில் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு  படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்தும் அதற்கு காரணமானவர்களை நீதித்துறை முன் நிறுத்தி கடும் தண்டணை வழங்கவும்,  படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கவும்,  அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுவிக்கவும்,  தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கக் கோரியும்,  இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More