குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
2015 முதல் தடுத்துவைத்திருந்த கனடாவை சேர்ந்த மதபோதகரை விடுதலை செய்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
வடகொரிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதிமுயற்சிகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் வடகொரிய அரசாங்கத்தினால் கடுழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மதபோதகர் ஹையன் சூ லிம் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என வடகொரியா தெரிவித்துள்ளது.
கனடா பிரதமரின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஆலோசகர் டானியல் ஜீன் கனடாவை சேர்ந்த மதபோதகர் ஹையன் சூ லிம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக வடகொரியா சென்றுள்ள நிலையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதபோதகரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து கனடா ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்