222
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்றங்கள், மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இதனைத் தெரிவித்துள்ளார். வாய்மொழி மூல கேள்விகளுக்கு அமைச்சர் முஸ்தபா பதிலளிக்கத் தவறியுள்ளதாகத் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தொடர்ச்சியாக தமது கேள்விகளுக்கு பதிலளிக்காது புறக்கணித்து வருவதாகவும் அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பின்வரிசை உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்கள் எனவும் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.
Spread the love