குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புத்தியில்லாதவர்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்தை விமர்சனம் செய்து வருவதாக பிரதி சொலிசுட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட குற்றம் சுமத்தியுள்ளார்.
அர்ஜூன் அலோசியசின் மொபைல் தகவல்கள் எவ்வாறு இரண்டு நாட்களில் வாசித்து அறிந்து கொண்டார்கள் என சிலர் கேள்வி எழுப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நிபுணர்களைக் கொண்டு இலகுவில் இவ்வாறான பணிகளை மேற்கொள்ள முடியும் எனவும் நவீன தொழில்நுட்பங்கள் பற்றி அறிந்திராத மூடர்கள் பிழையாக கருத்து வெளியிட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் பக்கச்சார்பாக செயற்படுவதாகவும், உரிய முறையில் கடமையாற்றவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.