குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் ஐஎஸ் அமைப்பிற்கு ஏற்படலாம் என வெளிவிவகார விடயங்களில் நிபுணத்துவம் மிக்க அமைப்பான ஹென்றி ஜக்சன் சொசைட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.
2014 முதல் குர்திஸ் அமைப்பான வைபிஜேயில் இணைந்துள்ள பிரித்தானிய பிரஜைகள் குறித்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
வைபிஜே என்பது தடைசெய்யப்பட்ட பிபிபிகே அமைப்பின் முன்னணி அமைப்பு. அதில் இணைந்துள்ளவர்கள் எதிர்காலத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடலாம் என ஜக்சன் சொசைட்டி தெரிவித்துள்ளது.
அந்த அமைப்புடன் இணைந்து போராடுபவர்கள் நாடு திரும்பிய பின்னர் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடும் அல்லது தனிநபர் அட்டுழியங்களில் ஈடுபடக்கூடும் என்றும் ஹென்றி ஜக்சன் சொசைட்டி எச்சரித்துள்ளது.
மேலும் அவர்களிற்கு ஆயத மற்றும் வெடிகுண்டு பயிற்சிகள் வழங்கப்படுவதால் ஆபத்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பிரித்தானிய பிரஜைகள் அந்த அமைப்புடன் இணைந்து கொள்வதை பிரித்தானிய h தடைசெய்யவேண்டும் எனவும் ஹென்றி ஜக்சன் சொசைட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்காக தடைசெய்யபட்ட மற்றுமொரு அமைப்பிற்கு உதவும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது
இதேவேளை பிரித்தானிய இவ்வாறன அமைப்புகளில் இணைந்து போராடுவதற்காக தனது பிரஜைகள் வெளிநாடு செல்வதை தடைசெய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் பென் வலஸ் குறிப்பிட்டுள்ளார்.