Home இந்தியாகருக்கலைப்புக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த 10 வயது சிறுமி குழந்தை பிரசவித்துள்ளார்

கருக்கலைப்புக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த 10 வயது சிறுமி குழந்தை பிரசவித்துள்ளார்

by admin

இந்தியாவில் துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட  10 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்திருந்த நிலையில் அவருக்கு கருக்கலைப்பு செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தநிலையில்    அச்சிறுமி இன்று  ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இந்தியாவின் சண்டீகர் நகரில் தாயின் இரண்டாவது கணவரால்  துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட     இந்தச் சிறுமியின் மருத்துவமனை   அறிக்கையில் கருவைக் கலைப்பதால்   உயிருக்கு ஆபத்து நேரும் என குறிப்பிடப்பட்டதால் உச்ச நீதிமன்றம் அதற்குரிய அனுமதியை  மறுத்தது.

சிறுமியின் தாய், தனது இரண்டாவது கணவர் மீது அளித்த முறைப்பாட்டின் பிரகாரம்   அவர் ஏற்கனவே  ; கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த  சிறுமிக்கு அவருக்கு குழந்தை பிறந்தவிடயம் மறைக்கபட்டுள்ளதாகவும்  வயிற்றில்   கல் ஒன்று இருப்பதாகக் தெரிவித்தே  அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More