மட்டக்களப்பு, சித்தாண்டியில் காணாமல் ஆக்கப்பட்ட 62 பேரின், 27ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று சனிக்கிழமை நினைவுகூரப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு தொடர்ச்சியான சுற்றிவளைப்புகள் நடந்து கொண்டிருந்த நிலையில் ஆவணி மாதம் முதலாம் திகதியில் இருந்து 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் திடீர் சுற்றி வளைப்புகளை மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினர், முகாமில் தஞ்சம் புகுந்த இளைஞர்கள் யுவதிகள 62 பேரை கைது செய்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றிருந்தனர்.
அவ்வாறு ஏற்றிக்கொண்டு சென்றவர்கள் முறக்கொட்டான்சேனை இராணுவத்தினர் முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டு, இன்றுடன் 27 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
இந்தநிலையில் இன்றைய தினம் குறித்த நிகழ்வை நினைவு கூரும் முகமாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணப்பிள்ளை துரைராஜாசிங்கம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், ஆலயங்களின் தலைவர்கள், சமூக அமைப்புகள், சித்தாண்டி கிராமத்து மக்கள் எனப் பலரும் ; கலந்துகொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குரிய நீதி விசாரணை வேண்டி ஆலய முன்றில் வழிபாட்டுடன் நினைவு தினத்தை நினைவுகூர்ந்துள்ளனர்.