கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை நிறுவகத்தின் கட்புல தொழினுட்பக் கலைத் துறையில் தற்காலிக விரிவுரையாளராகக் கடமையாற்றும் செல்வி எம் . ஏ. நூருல் அஸ்மாஹ் வின் கைவண்ணத்தில் உருவான அலங்கார வடிவங்களின் கண்காட்சி கடந்த (14)ஆம் திகதி திங்கள் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை நிறுவகத்தில் நடைபெற்றது.
நிறுவகத்தின் பணிப்பாளர், கலாநிதி எஸ். ஜெயசங்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில், கவிஞர் சோலைக்கிளி மற்றும் விரிவுரையாளர், எஸ். சிவரத்தினம் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் உள்ளக அலங்காரம், மற்றும் அலங்கார கைவினைப் பொருட்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.