Home இலங்கைமிராவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதானக் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு:-

மிராவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதானக் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு:-

by admin

கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிராவோடை சக்தி வித்தியாலயத்தின் மிக நீண்டகால பிரச்சினையாக இருந்து வந்த மைதானக் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தரப்படுமென, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்

குறித்த மைதானக் காணிப் பிரச்சனை தொடர்பான உயர்மட்ட மாநாடு, நேற்றையதினம் இடம்பெற்ற போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்

இந்தப் பிரச்சினை தொடர்பாக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் தற்போதைக்கு இரு தரப்பாரும் தீர்ப்புக் கிடைக்கும் வரை காணிக்குள் செல்வதில்லை என்றும், தீர்வு பாடசாலைக்குச் சாதகமாகக் கிடைக்கும் பட்சத்தில் காணி உரிமை கோருபவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

காணி உரிமை கோருவோருக்கு தீர்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் பாடசாலையின் நலனைக் கருத்தில் கொண்டு அக்காணியை விட்டுக் கொடுப்பது என்றும், அக்காணிக்கு மாற்றுக் காணி வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரு சமூகங்களுக்கிடையில் உள்ள காணிப் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, மூன்றாம் தரப்பினர் ஒருவரைக் கொண்டு வந்து நியாயம் கேட்பதால் எதிர்காலத்தில் இன ஒற்றுமைக்கு பாதகமாக அமையும் எனவும பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More