குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பார்சிலோனாவில் கடந்த வியாழக்கிழமை பொதுமக்கள் மீது வாகனத்த்pனை மோதி தாக்குதல் மேற்கொண்ட முக்கிய சந்தேக நபரான யூனுஸ் அபோயக்கப்பை சுட்டுக் கொன்றுள்ளதாக ஸ்பெயின் காவற்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர் , பார்சிலோனோ நகரின் மேற்குப் புறத்தில் உள்ள சுரபித் நகரில் வெடிகுண்டு பட்டை அணிந்திருந்த நிலையில் அவரை சுட்டுக் கொன்றதாக தெரிவித்துள்ளனர்.
இணைப்பு 2 -ஸ்பெயினில் காவல்துறையிரால் ஒருவர் சுட்டுக் கொலை – கொல்லப்பட்டவர் பார்சிலோனா தாக்குதலாளியா ?
Aug 21, 2017 @ 16:34
பார்சிலோனாவில் தாக்குதல் மேற்கொண்ட முக்கிய சந்தேக நபரான யூனுஸ் அபோயக்கப்பை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு ஏனைய ஐரோப்பிய நாடுகளிடம் ஸ்பெயின் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் இன்று ஸ்பெயினின் சுபிரத் நகரில் காவற்துறையால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட நபர் வெடிகுண்டுக் அங்கிய பட்டி ஒன்றை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இன்று சுட்டுக்கொல்லபட்ட நபர் தேடப்பட்டுவரும் சந்தேகநபரான அபோயக்கப்யா என்பது குறித்த தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
பார்சிலோனாவில் பொதுமக்கள் மீது வாகனத்தை மோதிய நபரை கண்டுபிடிக்க உதவுமாறு ஸ்பெயின் ஐரோப்பிய நாடுகளிடம் கோரிக்கை
: Aug 21, 2017 @ 14:38
கடந்த வார இறுதியில் பார்சிலோனாவில் பொதுமக்களை வாகனத்தால் மோதி படுகொலை செய்த நபரை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு ஏனைய ஐரோப்பிய நாடுகளிடம் ஸ்பெயின் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறிப்பிட்ட சந்தேகநபர் வாகனச்சாரதியுடன் வாகனத்தை கடத்தி பின்னர் அந்த வாகனச்சாரதியை கொலை செய்துள்ளதாகவும் ஸ்பெயின் தெரிவித்துள்ளது
பார்சிலோனாவில் தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் மொராக்கோவை சேர்ந்த 22 வயது யூனுஸ் அபோயக்கப் என அறிவித்துள்ள ஸ்பெயின் குறிப்பிட்ட நபரை கைதுசெய்வதற்காக ஏனைய ஐரோப்பிய நாடுகளின் உதவியையும் கோரியுள்ளது.
.இதேவேளை பார்சிலோனாவில் தாக்குதலை மேற்கொண்ட நபர் எல்லையை கடந்து பிரான்சிற்குள் நுழைந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த நபர் எல்லையை கடந்து சென்றுவிட்டார் என்பதற்கான தடயங்கள் எதுவுமில்லை எனவும் அவரால் இலகுவாக எல்லையை கடக்க முடிந்திருக்கும் என தாங்கள் கருதவில்லை எனவும் தெரிவித்துள்ள அதிகாரி ஒருவர் எனினும் அதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.