Home இலங்கைஇலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக மலாவி அறிவிப்பு

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக மலாவி அறிவிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக மலாவி அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேண விரும்புவதாக மலாவி ஜனாதிபதி ஆர்தர் பீட்டர் முத்தாரிக்கா, தென் ஆபிரிக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுனில் டி சில்வாவிடம் தெரிவித்துள்ளார்.

சுனில் டி சில்வா, மலாவிற்கான வதிவிடமற்ற உயர்ஸ்தானிகராக கடமையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மலாவி ஜனாதிபதி கோரியுள்ளார்.

இதேவேளை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாழ்த்துச் செய்தியை உயர்ஸ்தானிகர் சுனில் டி சில்வா, மலாவி ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More