குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டிருந்த சிறுபோக நெற்செய்கை வெற்றிகரமாக நிறைவு பெற்று அறுவடைகள் இடம்பெற்று வருவதாக இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனச் செயலாளர் எஸ்.சிவமோகன் தெரிவித்தார்.
இவ்வாண்டு காலபோகத்தின் விதை நெல்லிற்காக 900 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இரணைமடுக் குளம் முழுமையாக வற்றி நீர்ப்பாசன நெருக்கடி ஏற்பட்ட போது பயிர்ச் செய்கை பாதிப்புக்குள்ளாகலாம் என்ற நிலையில் நீர்ப்பாசனத் திணைக்களமும் விவசாயிகளும் இணைந்து இரணைமடுக் குளத்தின் வாய்க்கால்களை ஆழப்படுத்தி இறுதிக்கட்ட நீரப்பாசன முயற்சிகளை மேற்கொண்டமை மற்றும் மழை வீழ்ச்சி இடம் பெற்றமை சிறுபோக நெற்செய்கையினை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு காரணமாக அமைந்து விட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
நான்கைந்து நாட்களில் அறுவடை நடைபெற்று முடிந்து விடும் எனவும் தெரிவித்தார்.