Home உலகம்பிரித்தானியாவில் இன்று காலை ஏற்பட்ட வீதிவிபத்தில் 8 பேர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் இன்று காலை ஏற்பட்ட வீதிவிபத்தில் 8 பேர் உயிரிழப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரித்தானியாவின்  தென்கிழக்கு பகுதியில் உள்ள பக்கிங்ஹம்ஷியர் ((Buckinghamshire)    பகுதியில் உள்ள M1   நெடுஞ்சாலை வழியாக சென்ற இரு   பாரவூத்திகளுக்கிடையில்  இடையில் பயணிகள் வண்டி   ஒன்று சிக்கி ஏற்பட்ட  விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4பேர் காயமடைந்துள்ளனர்.  காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை  நிகழ்ந்த இந்த விபத்தில் சிக்கிய பயணிகள் வண்டி   நொட்டிங்ஹாம் நகரில் இருந்து பயணிகளை ஏற்றி வந்ததாக தேம்ஸ்நதிப்பகுதி காவல்துறையினர்   தெரிவித்துள்ளனர்.

இரு பாரவூர்திகளுக்கு இடையில் சிக்கிய பயணிகள் வண்டி    நசிந்து போய்  காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி விபத்து தொடர்பில்   Worcestershire  சேர்ந்த 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதுடன், பார ஊர்தியை செலுத்தியவர் என சந்தேகிக்கப்படும் இவர், கட்டுப்பாட்டை மீறிய அளவில் மதுபானம்  அருந்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More