குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மாரின் ரொகிங்யா முஸ்லீம் இனத்தவரிற்கு எதிரான திட்டமிட்ட துஸ்பிரயோகங்களே ரைகன் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைகளிற்கு காரணம் என ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் {ஹசைன் தெரிவித்துள்ளார்.
ரைகைனில் மீண்டும் வன்முறைகள் வெடித்துள்ளமை குறித்து அச்சம் வெளியிட்டுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அங்கு ஏற்பட்டுள்ள இரத்தக்களறியை அதிகாரிகள் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ள அவர் இதுவே உயிரிழப்புகளிற்கும் இடம்பெயர்விற்கும் காரணமாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனினும் இந்த சம்பவங்களை தடுத்திருக்கலாம் எனவும்; தெரிவித்துள்ளார்.
மேலும் பல தசாப்தங்களாக காணப்படும் திட்டமிட்ட தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களும் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக முன்னெடுக்கப்பட்ட வன்முறையுடன் கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளுமே வன்முறை தீவிரவாதத்தின் வளர்ச்சிக்கு காரணம் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
படையினருக்கும் பொதுமக்களிற்கும் எதிராக தாக்குதல்களை மேற்கொண்டவர்களை நீதியின் முன்நிறுத்தவேண்டும் எனவும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.