Home இந்தியாஅ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், தினகரன் தரப்பிற்கும் அழைப்பு:-

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், தினகரன் தரப்பிற்கும் அழைப்பு:-

by admin


அ.தி.மு.கவின்  சட்டமன்ற உறுப்பினர்கள்  கூட்டத்துக்கு    தினகரன் தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை அஅ.தி.மு.கவின்  சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே  மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என அ.தி.மு.க அறிவித்துள்ளது.

இந்தநிலையிலேயே    கூட்டத்திற்கு டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செப்டம்பர் 12 ஆம் திகதி அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் ஆகியவை நடைபெற உள்ள நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More