குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவின் மிகப்பெரும் ஆயுதகண்காட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை யுத்தங்களிற்கு எதிரான செயற்பாட்டாளர்கள் ஆரம்பித்துள்ளனர். அடுத்தவாரம் டொக்லான்டின் எக்செல் நிலையத்தில் ஆரம்பமாகவுள்ள ஆயுதகண்காட்சிக்கு எதிராகவே ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.
உலகின் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள சவுதிஅரேபியா பஹ்ரைன் போன்ற நாடுகள் உட்பட பல நாடுகள் இந்த கண்காட்சிக்கு தங்கள் பிரதிநிதிகளை அனுப்பவுள்ளன.
இந்த கண்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் எக்செல் நிலையத்திற்கு முன்னாள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.மேலும் ஓவ்வொரு தினத்திலும் ஓவ்வொரு கருப்பொருளை மையமாக வைத்து அவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.
பிரித்தானியாவின் டிஎஸ்ஈஐ கண்காட்சியில் உலகின் மிக மோசமான அரசாங்கங்களும் மிகப்பெரிய ஆயுத விற்பனை நிறுவனங்களும் கலந்துகொள்ளவுள்ளதாக ஆயுதவிற்பனைக்கு எதிரான பிரச்சார அமைப்பை சேர்ந்த அன்றூ ஸ்மித் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏமனில் ஏற்பட்டுவரும் பாரிய உயிரிழப்புகளிற்கு பிரித்தானியாவின் போர் விமானங்களே முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ள அவர் இவ்வாhறான கண்காட்சிகள் யுத்தத்தையும் பேரழிவுகளையும் ஊக்குவி;க்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.