அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான அஞ்சல் ஓட்ட விளையாட்டு போட்டி இன்று (08) யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனினால் ஆரம்பித்து வைக்கபட்டது. இந் நிகழ்வில்; வட மாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன் உட்பட கல்வி அதிகாரிகள் விளையாட்டுதுறை அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்
இந் நிகழ்வு தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் ‘இன்றைய இளைஞர்கள் நாட்டின் நாளைய தவைர்கள்’ அந்த வகையில் தெற்கில் இருந்து வடக்கிற்கு பெருமலான மாணவர்கள் இந்த அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான அஞ்சல் ஓட்ட விளையாட்டு போட்டியில் கலந்துக் கொள்கின்றார்கள்.
இது இரு இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நிகழ்வாகும். இந்த மாணவ சமுதாயமே நாட்டின் நாளைய தலைவர்கள். அவ்வாறனவர்களின் மத்தியில் சிறு வயதிலேயே இவ்வாறான நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என தெரிவித்தார்.
இவ்வாறானவற்றை முன்னைய தலைவர்கள் முன்னெடுக்காததினாலயே நாட்டில் பல இழப்புகள் ஏற்பட காரணமாக இருந்துள்ளது. அந்த வகையில் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ஒரு நிகழ்வாக இந்த அஞ்சல் ஒட்ட போட்டியை நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வும்பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாட்டின் நல்லாட்சிக்கு வழி வகுத்துள்ளார்கள். அதற்கு இவ் நிகழ்வு மிகவும் பொருத்தமாக உள்ளது. விளையாட்டு என்பது இன மத மொழிக்கு அப்பாற்பட்டது. இதனை மாணவர்களிடையே கொண்டு செல்ல வேண்டியது கட்டாயமாணதாகும். எனவும் தெரிவித்தார்.