164
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்றிரவு கார் மீது மரம் ஒன்று சரிந்து விழுந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக மாநில தலைநகரின் பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்தநிலையில் நேற்றிரவு காரில் சென்று கொண்டிருந்த மூன்று பேர் மழை காரணமாக சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் கீழே காரை நிறுத்தியுள்ள வேளை திடீரென அந்த மரம் காரின் மீது விழுந்ததினால் இந்த உயிழப்புகள் ஏற்பட்டுள்ளது. காரில் இருந்த ஏனைய இரண்டு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Spread the love