Home இலங்கைசரத் பொன்சேகா அமைச்சுப் பதவிக்கு தகுதியானவரா என ஐ.தே.க தீர்மானிக்க வேண்டும்

சரத் பொன்சேகா அமைச்சுப் பதவிக்கு தகுதியானவரா என ஐ.தே.க தீர்மானிக்க வேண்டும்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அமைச்சுப் பதவிக்கு தகுதியானவரா என்பதனை ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானிக்க வேண்டுமென எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். அண்மையில் சரத் பொன்சேகா, பைத்தியம் பிடித்த சில காவிகள் என பௌத்த பிக்குகளை இழிவாக பேசியிருந்தமை தொடர்பிலேயே எல்லே குணவன்ச தேரர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான ஒருவரை அமைச்சரவை அமைச்சராக பதவியில் நீடிக்கச் செய்வது பொருத்தமுடையதா என அவர் கேள்வி எழுப்பியுள்ள அவர் சரத் பொன்சேகா அரசியல் ரீதியாக நிராகரிக்கப்பட்டவர் எனவும், ஐக்கிய தேசியக் கட்சியே அவருக்கு சந்தர்ப்பம் வழங்கியது எனவும்   சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஓருவரை அமைச்சரவையில் அங்கம் வகிக்கச் செய்வது கட்சிக்கு எவ்வாறான நன்மதிப்பை உருவாக்கும் என்பதனை கட்சியே தீர்மானிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More